Ghaziabad:
ஐந்து மர்ம நபர்கள் சேர்ந்து காசியாபாத் மோடிநகரைச் சேர்ந்த 17 வயது மாணவரை பாலியல் வன்முறை செய்து அந்தரங்க பகுதியில் தாக்கியுள்ளதாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தனியாக நடந்து சென்று கொண்டிருந்த மாணவரை, ஐந்து மர்ம நபர்கள் ஆளில்லா கடைக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தப்பிக்க நினைத்த மாணவனின் அந்தரங்க பகுதியில் இரும்பு கம்பினால் தாக்கி, வன்கொடுமைகளை போனில் பதிவு செய்துள்ளனர் என உயர் காவல் அதிகாரி வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார்.
மாணவனின் 1600 ரூபாய் பணத்தையும் திருடியுள்ளனர். காசியாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றச்செயலில் ஈடுப்பட்ட நபர்கள் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததாகவும், மாணவரின் ஜாதி குறிப்பிட்டு பிரச்சனையில் ஈடுபட்டதாகவும் மாணவரின் தந்தை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.