ஹைலைட்ஸ்
- கூந்தல் வலுவிழந்து இருக்கும் போது முடி உதிர்வு ஏற்படுகிறது.
- புற ஊதா கதிர்களாலும் கூந்தல் பாதிக்கப்படும்.
- ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் கூந்தல் உறுதியாக இருக்கும்.
அடர்த்தியான கூந்தலை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. கூந்தலின் ஆரோக்கியம் அடர்த்தியும் நாம் முறையாக பராமரிக்கும் போது குறையாமல் அப்படியே இருக்கும். நம் கூந்தல் தன்மைக்கு ஏற்ற அழகு பொருட்களை பயன்படுத்த வேண்டும். மார்கெட்களில் கிடைக்கக்கூடியவற்றை எல்லாம் வாங்கி பயன்படுத்தினால் கூந்தல் உதிர்வு, முடி உடைதல், நுனி பிளவு, நரை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இயற்கையாகவே கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்க சில வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
1. எண்ணெய்:
கூந்தலுக்கு எண்ணெய் தடவுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எண்ணெய் தடவுவதால் கூந்தல் உறுதியாகவும், பட்டுபோல மென்மையாகவும் இருக்கும். கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது டீ ட்ரீ எண்ணெய் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களை கொண்டு தலைக்கு மசாஜ் செய்து வருவதால் மயிர்கால்கள் உறுதியாக இருக்கும்.
2. ட்ரிம்மிங்:
கூந்தல் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் வேர்களும் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் அடிக்கடி கூந்தலை ட்ரிம் செய்யலாம். அடிக்கடி ட்ரிம் செய்வதால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். நுனி பிளவுகளை ட்ரிம் செய்யும்போது, கூந்தல் வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும்.
3. முட்டை:
முட்டையில் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடைந்த கூந்தலை சரிசெய்யவும், கூந்தலை மாய்சுரைஸ் செய்யவும் முட்டையை பயன்படுத்தலாம். முட்டையை கொண்டு கூந்தலுக்கு மாஸ்க் போடலாம். இதனால் முடி உதிர்வு குறைந்து நீளமான மற்றும் உறுதியான கூந்தலை பெறலாம்.
4. சாலட்:
உறுதியான கூந்தலுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். விதைகள் மற்றும் கொட்டைகள், கீரைகள், பீன்ஸ் போன்ற உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடலாம். மேலும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் கூந்தல் உறுதியாக இருக்கும்.
5. மாசு:
கூந்தலுக்கு ஹீட்டர் மற்றும் ட்ரையர் பயன்படுத்தக்கூடாது. பயணங்களின் போது கூந்தலை பாதுகாப்பாக ஸ்கார்ஃப் கொண்டு மூடி கொள்ள வேண்டும். கூந்தலுக்கு கலரிங் செய்வதை தவிர்க்கலாம். இரசாயணம் மிகுந்தவற்றை பயன்படுத்தாமல் இருக்கலாம்.