বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 08, 2020

கேரளாவில் புதியதாக 5 கொரோனா பாதிப்பாளர்கள்: தேசிய அளவில் ஒட்டுமொத்த எண்ணிக்கை 39ஆக உயர்வு.

​கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் பயண வரலாற்றை விமான நிலையத்தில் பகிர்ந்து கொள்ளவில்லை

Advertisement
Kerala
Thiruvananthapuram/ New Delhi:

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் பயண வரலாற்றை விமான நிலையத்தில் பகிர்ந்து கொள்ளவில்லை என்று அம்மாநில மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்திருக்கிறார்.

கேரளாவில் உள்ள ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது தற்போது பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த குடும்பம் சமீபத்தில் இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளது, இது கொரோனா வைரஸ் அதிகம் பதிவான நாடுகளில் ஒன்றாகும். குடும்பத்தினர் விமான நிலையத்தில் தங்கள் பயண வரலாற்றை பகிர்ந்து கொள்ளவில்லை என்று மாநில சுகாதார அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

"அவர்களும் ஆரம்பத்தில் மருத்துவமனையில் சிக்கப்பெற மறுத்துவிட்டார்கள், நாங்கள் அவர்களைச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது" என்றும் அமைச்சர் கூறினார்.

Advertisement

கொரோனா வரைஸ் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் ஒரு குழந்தையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐந்து பேரும் பத்னமதிட்டா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.

"குழந்தையும் பெற்றோரும் சமீபத்தில் இத்தாலிக்குச் சென்று திரும்பி வந்தபின், அவர்கள் சில உறவினர்களைச் சந்தித்தனர். உறவினர்கள்தான் அறிகுறிகளுடன் முதலில் மருத்துவமனையை அணுகினர், பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இத்தாலிக்குச் சென்ற குடும்பமும் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டது" என்று அமைச்சர் கூறினார் .

Advertisement

இந்தியாவின் முதல் மூன்று கொரோனா வைரஸ்கள் கேரளாவில் பதிவாகியிருந்தன. மூன்று நோயாளிகளும் நோயிலிருந்து மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement