हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 30, 2019

ஸ்ரீநகரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 5 அரசியல் தலைவர்கள் விடுவிப்பு!

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மத்திய அரசு காஷ்மீரில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களையும் தடுப்பு காவலில் வைத்தது.

Advertisement
இந்தியா Edited by
New Delhi :

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, பல்வேறு அரசியல் தலைவர்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 5 பேர் இன்று விடுவிக்கப்ட்டுள்ளனர்.

எனினும், காஷ்மீரின் மூன்று மிக முக்கியமான தலைவர்கள் தேசிய மாநாட்டின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் தொடர்ந்து, காவலில் உள்ளனர். 

அவர்களை விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டவட்டமான தேதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. எனினும், அவர்கள் சரியான நேரத்தில் விடுவிக்கப்படுவார்கள் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

30 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் இருந்து ஐந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட தலைவர்களில் மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த இஷ்பாக் ஜபார், குலாம் நபி பட், பஷீர் மிர் ஜாகூர் மிர் மற்றும் யாசிர் ரேஷி ஆகியோர் அடங்குவர்.

Advertisement

பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி குடியரசுத்தலைவர் உத்தரவு மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்ககளாக பிரித்து உத்தரவிட்டனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர், இது மக்கள் மத்தியில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டு 145 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சேவைகள் வழங்கப்பட்டன. 

Advertisement

ஜம்முவில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement