ரஃபேல் ஜெட் விமானங்கள் தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை
New Delhi: இன்று ஐந்து ரஃபேல் விமானங்கள் முறைபடி இந்திய விமானப்படையில் இணைகின்றது. இதற்கான சடங்குகள் காலை 10 மணியளவில் தொடங்குகின்றது. இதில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரும் பங்கேற்கிறார்கள். இந்திய விமான படையின் 17வது பிரிவின் இந்த விமானங்கள் தங்க அம்புகள் என்கிற அடையாளத்தின் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றன. லடாக்கில் நடந்து வரும் எல்லைப்பிரச்னை சமயத்தில் இந்த விமானப்படையின் நிகழ்வு முக்கியமானதாக கருதப்படுகின்றது.
ஹரியானாவின் அம்பாலா விமான தளத்தில் நடைபெறும் இந்த நிகழ்கு குறித்து முன்னதாக இந்திய விமானப்படை, “ஆயுதப்படையில் புதிய பறவைகள்” என டிவிட் செய்திருந்தது. பிரெஞ்சு தொழில்நுட்பத்தில் தயாரான இந்த போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைவது விமானப்படை வரலாற்றில் முக்கிய மைல்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.
பிரெஞ்சு விண்வெளி டசால்ட் ஏவியேஷனால் கட்டமைக்கப்பட்ட ரஃபேல் ஜெட் விமானங்கள் தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. இவை ஒன்றுக்கும் மேற்பட்ட தனித்திறன்களை கொண்டுள்ளன.
இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமை படை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி, மார்ஷல் ஆர்.கே.எஸ் படோரியா, பாதுகாப்புத்துறை செயலர் அஜய் குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தண்ணீர் பீச்சியடித்து வரவேற்கும் பாரம்பரிய வரேவேற்பு சடங்கு இந்த இணைப்பு விழாவில் நடத்தப்படும் என விமானப்படை செய்தி தொடர்பாளர் விங்க் கமாண்டர் இந்தராநில் நந்தி கூறியுள்ளார்.
இந்தியா பிரான்ஸிடமிருந்து 59,000 கோடிக்கு பெற இருக்கும் 36 ரஃபேல் விமானங்களின் ஒரு பகுதியாக முதல் ஐந்து விமானங்கள் கடந்த ஜூலை 29 அன்று ஹரியானாவின் அம்பாலா விமானப்படைத் தளத்திற்கு வந்து சேர்ந்தது.
அடுத்தபடியாக இரண்டாவது முறையாக 5 ரஃபேல் விமானங்கள் நவம்பரில் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.