Read in English
This Article is From Oct 06, 2018

ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிப்பு

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் டிசம்பர் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்

Advertisement
இந்தியா
New Delhi:

தேசிய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இங்கு அடுத்த மாதம் தேர்தல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தகவலை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் இன்று அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாக டிசம்பர் மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரை பொறுத்தவரையில் முதல்கட்டமாக நவம்பர் 12-ம் தேதி 18 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

2-வது கட்டமாக சத்தீஸ்கரில் மீதம் இருக்கும் 72 தொகுதிகளில் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டதென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்காக கடந்த மாதம் தெலங்கானா முதல்வர் சட்டசபையை கலைத்தார். அதே நேரத்தில் தெலங்கானாவில் மிகவும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராவத் கூறியிருந்தார். இதுதொடர்பாக வாக்காளர் பட்டியலை ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் அளிக்கவுள்ளது.
 

Advertisement