சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது
- தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது
- சில மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இது குறித்து வானிலை மையம், ‘தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும்,
நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தக் காற்று மாற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தின் ஒகேனக்கல் பகுதியில் 7 சென்டி மீட்டர் மழையும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும்' என்று தெரிவித்துள்ளது.