Read in English বাংলায় পড়ুন
This Article is From Sep 20, 2018

பிகாரில் டானிக் போதையால் நடந்த விபரீதம்… இருவர் சுட்டுக் கொலை!

Purnea remand home: இது குறித்து விஷயம் அறிந்த விடுதியின் வார்டன், மாணவர்களின் அறைக்குச் சென்று டானிக் உள்ளிட்டப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளார்

Advertisement
இந்தியா

விடுதியிலிருந்து தப்பித்த சிறுவர்களைப் பிடிக்க தனிப் படை அமைத்துள்ளது போலீஸ்

Highlights

  • தப்பித்து ஓடிய சிறுவர்களில் ஒருவன் உள்ளூர் அரசியல்வாதியின் மகன், போலீஸ்
  • சிறுவர்களிடம் எப்படி துப்பாக்கி வந்தது என்பது குறித்து போலீஸ் விசாரணை
  • வார்டன் மற்றும் ஒரு சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
Patna:

பிகார் மாநிலத்தின் புர்னியா (Purnea remand home) இது குறித்து விஷயம் அறிந்த விடுதியின் வார்டன், மாணவர்களின் அறைக்குச் சென்று டானிக் உள்ளிட்டப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளார்) என்ற ஊரிலிருக்கும் சிறுவர் சீர்திருத்த விடுதியில் இருந்து 5 சிறுவர்கள் தப்பித்துள்ளனர். அவர்கள் தப்பிக்கும் போது பள்ளியின் வார்டன் மற்றும் இன்னொரு சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். 

புர்னியா, பாட்னாவிலிருந்து 325 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அங்கு பதின் பருவ குற்றவாளிகளுக்கான சிறார் சீர்திருத்த விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் உள்ள 5 மாணவர்கள் டானிக் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தனர் என்று கூறப்படுகிறது. இது குறித்து விஷயம் அறிந்த விடுதியின் வார்டன், மாணவர்களின் அறைக்குச் சென்று டானிக் உள்ளிட்டப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளார். மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். 

போதை மருந்துடன் சிக்கிய 5 பேரையும் அங்கு இருந்து வேறொரு இடத்துக்கு மாற்றவும் ஒப்புதல் பெற்றுள்ளார் வார்டன். 

Advertisement

இதை அறிந்த அந்த 5 சிறுவர்களும் கோபம் கொண்டு, துப்பாக்கியால் வார்டன் மற்றும் தங்களை காட்டிக் கொடுத்த இன்னொரு சிறுவனையும் சுட்டுவிட்டு, விடுதியிலிருந்து தப்பித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல் துறை விசாரித்து வருகிறது. விடுதியிலிருந்து தப்பியோடிய சிறுவர்களையும் பிடிக்க தனிப் படை அமைத்துள்ளது போலீஸ்.

Advertisement
Advertisement