This Article is From Aug 30, 2019

டைவ் அடித்து அசத்திய பள்ளி சிறுமி! 5 முறை தங்கம் வென்ற வீராங்கனை பாராட்டு!! #Video

பள்ளிச்சிறுமி டைவ் அடிக்கும் வீடியோ இணைய தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

டைவ் அடித்து அசத்திய பள்ளி சிறுமி! 5 முறை தங்கம் வென்ற வீராங்கனை பாராட்டு!! #Video

சிறுமியின் ஜிம்னாஸ்டிக் திறமையை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.

டைவ் அடிக்கும் பள்ளிச்சிறுமியின் வீடியோதான் தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. மிகக் கடினமான ஜிம்னாஸ்டிக் மூவ்மெண்டுகளை, சிறுமி மிக எளிதாக செய்து பலரது பாராட்டை பெறுகிறார். 

சில நாட்களுக்கு முன்பாக இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ லட்சக்கணக்கில் பார்வைகளை அள்ளியுள்ளது. கடைசியாக இந்த வீடியோ ஒலிம்பிக்கில் 5 முறை தங்கம் வென்ற ரோமானிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா கோமானெசி வரைக்கும் சென்றிருக்கிறது. 
 

சிறுமியின் திறமையை பாராட்டியுள்ள கோமானெசி 'This is awesome' (இது அற்புதம்) என்று தலைப்பிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார். மொத்தம் 15 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் முதலில் ஒரு சிறுவன் டைவ் அடிக்கிறார்.

அதைத் தொடர்ந்து சிறுமி 2 முறை டைவ் அடிக்கிறார். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. இருப்பினும், கமென்டுகளை வைத்து பார்க்கும்போது வீடியோ நாகலாந்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 
 

.