Aizawl: மிசோரம் மாநிலத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும், சிட்டிங் முதல்வருமான லால் தனாவாலா தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார்.
பாதுகாப்பு கருதி தனாவாலா சம்பாய் மற்றும் செர்சிப் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சம்பாய் தொகுதியில் மிசோரம் தேசிய முன்னணியும், செர்சிப் தொகுதியில் சோரம் மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளன.
தனாவாலவுக்கு 76 வயதாகிறது. அவர் கடந்த 2008-ல் இருந்து எம்எல்ஏ வாக இருந்து வருகிறார். 2013 தேர்தலில் வெற்றி பெற்ற தனாவாலா முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது அவர் முதல்வராகுவது 5-வது முறையாகும்.
வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மிசோரத்தில் மட்டும்தான் உள்ளது. இந்த தேர்தலில் மிசோரத்தையும் இழக்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை 10 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.