हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 06, 2019

தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா??

சாப்பிட்ட பின் உண்டாகும் தாகத்தை போக்க தண்ணீர் குடிக்கலாம்.  உங்களுக்கு அடிக்கடி பசியுணர்வு ஏற்படும்போது தண்ணீர் குடிக்கலாம்.   

Advertisement
Health Translated By

Highlights

  • தினமும் காலையில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
  • பசிக்கும்போதெல்லாம் நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.
  • உடற்பயிற்சிக்கு பின் தண்ணீர் குடித்து வரலாம்.

உணவின்றி கூட சில நாட்கள் வாழ்ந்திடலாம்.  ஆனால் நீரின்றி வாழ முடியாது.  உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்காவிட்டால் உடல் உறுப்புகளின் இயக்கமும் சீராக இருக்காது.  உடலின் வெப்பநிலை முதல் செரிமானம் வரை எல்லாவற்றுக்குமே நீர் தேவைப்படுகிறது.  தினமும் இரண்டு லிட்டர் தண்ணீராவது குடித்துவிட வேண்டும்.  உடல் எடை குறைக்க எப்போதெல்லாம் நீர் அருந்த வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.   

பசி: 

சாப்பிட்ட பின் உண்டாகும் தாகத்தை போக்க தண்ணீர் குடிக்கலாம்.  உங்களுக்கு அடிக்கடி பசியுணர்வு ஏற்படும்போது தண்ணீர் குடிக்கலாம்.   இதனால் துரித உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது குறையும்.  உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம். 

Advertisement

சோர்வு:

Advertisement

உடல் நிலை சரியில்லாதபோது, நிறைய தண்ணீர் குடிப்பது கடினமானது.  ஆனால் சோர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாதபோது தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.  இதனால் உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகி புத்துணர்ச்சி கிடைக்கிறது.

சாப்பிடும் முன்:

சாப்பிடுவதற்கு முன் நிறைய தண்ணீர் குடிப்பதால் நாம் சாப்பிடக்கூடிய உணவின் அளவு குறையும்.  நீங்கள் எப்போது சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடித்து வரலாம்.  இதனால் கலோரிகளின் அளவு குறைந்து, உடல் எடையும் குறையும்.  சாப்பிட்ட பின் உடனடியாக நீர் அருந்துவதை தவிர்த்திடுங்கள்.  

Advertisement

காலை: 

காலை எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிப்பதை நம்மில் பலரும் வழக்கமாக வைத்திருப்பார்கள்.  அப்படி செய்வது உடல் நலனிற்கு கேடு விளைவிக்கும்.  காலை எழுந்தவுடன் முதல் வேலையாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  அப்படி குடிக்கும்போது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுகள் வெளியேறும்.  மலச்சிக்கல் ஏற்படாது.  வெதுவெதுப்பான நீர் அருந்துவதே நல்லது.  குளிர்ந்த நீரை குடிக்கும்போது இருமல் ஏற்படும்.

Advertisement

உடற்பயிற்சி:

Advertisement

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.  உடற்பயிற்சியின்போது உடலில் நிறைய நீரிழப்பு ஏற்படும் என்பதால் நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. மேலும் குடல் இயக்கங்களை சீராக்குகிறது.

தினமும் 8-10 க்ளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது.  பருவக்கால மாற்றத்தின்போதும் இதையே பின்பற்றலாம்.  இதனால் உடல் உபாதைகள் தடுக்கப்படுகிறது.

Advertisement