ஹைலைட்ஸ்
- 5 பேரும் ஜார்கண்டின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்
- இது குறித்து 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- வீதி நாடக நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் போது 5 பேரும் கடத்தப்பட்டனர்
Patna:
மனித கடத்துலுக்கு எதிராக போராடி வந்த ஜார்கண்டைச் சேர்ந்த 5 பெண்கள் பாட்னாவில் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஜார்காண்டைச் சேர்ந்த இந்த பெண்கள் மனித கடத்தலுக்கு எதிராக இயங்கி வரும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் செயல்பட்டு வந்தனர். அவர்கள், பாட்னாவில் மனித கடத்தலுக்கு எதிராக ஒரு வீதி நாடகத்தை அரங்கேற்ற சென்றிருந்தனர. அவர்களுடன் 6 ஆண்களும் சென்றிருந்தனர்.
வீதி நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, வந்த ஒரு மர்ம கும்பல் ஆண்களை அடித்துவிட்டு, பெண்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். பின்னர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பெண்களுக்கு செய்யப்பட்ட மருத்துவச் சோதனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதிபடுத்துப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.