ராட்டினத்திற்கு வெளியே 5 வயது சிறுவன் தொங்கும் காட்சி
சீனாவல் ஜெஜியாங் மாகாணத்தில் தைசூ யுஹான் என்ற கேளிக்கை பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 24-ம்தேதி தாய் ஒருவர் தனது 5 வயது மகனுடன் சென்றுள்ளார். அங்குள்ள ராட்சத ராட்டினத்தை பார்த்த அவர், அதில் தன் மகனை மட்டும் தனியாக ஏற்றி விட்டு, சுற்ற வேண்டும் என அங்குள்ள பணியாளர்களை கேட்டுக் கொண்டார்.
இதற்கு பணியாளர்கள் முதலில் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கு 30 யுவான் (ரூ. 316) கொடுத்து தனியாக அந்த சிறுவனை ராட்டினத்தில் ஏற்றியுள்ளார். ராட்டினம் சுற்றிக் கொண்டிருக்கும்போது அதன் கதவை திறந்து சிறுவன் வெளியே வந்துள்ளான். அப்போது, தடுமாறி கீழே விழும் நிலைக்கு சிறுவன் சென்றான். அதிர்ஷ்டவசமாக அவனது கால்களும் கழுத்தும் ராட்டின கம்பிகளை பிடித்துக் கொண்டதால் 132 அடி உயரத்தில் தொங்கினான் சிறுவன்.
பின்னர் ஒருவழியாக சிறுவன் மீட்கப்பட்டு முதல் உதவிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
இதனை வீடியோ எடுத்து சிலர் வெளியிட்டு விட்டனர். அந்த காட்சி வைரலாகி வருகிறது.
Click for more
trending news