This Article is From Apr 14, 2019

110 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயதுக் குழந்தை

8 மணிநேர போராட்டத்திற்குப் பின் குழந்தை நலமுடன் மீட்கப்பட்டுள்ளது. 

110 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த  5 வயதுக் குழந்தை

மரத்திலிருந்து பழம் பறிக்க முயன்றவன் தவறி விழுந்து விட்டதாகத் தெரிகிறது

Mathura:

மதுராவில் 5 வயதுக் குழந்தை 110 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழந்தது. 8 மணிநேர போராட்டத்திற்குப் பின் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

ஷிர்காராவில் உள்ள அகர்லயா கிராமத்தில் சனிக்கிழமை மாலை பிரவின் என்ற 5 வயது சிறுவன்  மரத்திலிருந்து பழம் பறிக்க முயன்றவன் தவறி விழுந்து விட்டதாகத் தெரிகிறது 8 மணிநேர போராட்டத்திற்குப் பின் குழந்தை நலமுடன் மீட்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவின் முதன்மை மருத்துவ அதிகாரி, “ குழந்தை நன்றாக உள்ளான். முன்னெச்சரிக்கை பொருட்டு சில மருந்துகளை மட்டும் கொடுத்துள்ளோம். மருத்துவமனையில் இரவு முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு நாளை வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழு துணை படைவீரர் அனில் குமார், “குழந்தையை மீட்க பல மணிநேரம் போராட்டம் நிகழ்ந்தது. இந்திய ராணுவமும் மீட்பு நடவடிக்கைகளில் உதவியது” என்று தெரிவித்தார்

சம்பவம் நிகழ்ந்த செய்தியைக் கேட்ட உடனே. மாவட்ட நிர்வாக அதிகாரிகள், உள்ளூர் அதிகாரி ஆகியோர் குழந்தையைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர்.
 

.