This Article is From Jun 01, 2018

அமெரிக்க இராணுவ தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட தலிபான் தலைவர்கள் பலி!

50க்கும் மேற்பட்ட மூத்த தலிபான் படைத்தளபதிகள் பீரங்கி ஆயுதங்களால் சுட்டு கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க இராணுவச் செய்தி தொடர்பாளர் கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளார்

அமெரிக்க இராணுவ தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட தலிபான் தலைவர்கள் பலி!

The U.S. military said the May 24 meeting involved commanders from different Afghan provinces. (AFP)

ஹைலைட்ஸ்

  • தெற்கு கண்டஹார் பகுதிகளில் தாக்குதல்
  • மூன்று குடிமக்கள் கொல்லப்பட்டனர்
  • 13 பேர் காயம் அடைந்தனர்
ஆப்கானிஸ்தான், தெற்கு மாகாணப் பகுதியான ஹெல்மாண்டில், 50க்கும் மேற்பட்ட மூத்த தலிபான் படைத்தளபதிகள் பீரங்கி ஆயுதங்களால் சுட்டு கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க இராணுவச் செய்தி தொடர்பாளர் கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளார். 

கடந்த வார தாக்குதல்களின் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் இஸ்லாமிய சட்டங்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து, தாக்குதல்களைக் கடந்த மாதம் தொடங்கினர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய குழு, உள்துறை மற்றும் பாதுகாப்பு படையினரை பலமாக தாக்கினர். இந்தச் சண்டை இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக தொடர்ந்தது. வடக்கு பகுதியான தக்கார் மாகாணத்திலும், லோகர் கிழக்கு பகுதியிலும், கண்டஹார் தெற்கு பகுதிகளிலும், தீவிரமான தாக்குதலை தொடர்ந்தனர்.

மே 24 ஆம் தேதி முசா குலா மாவட்டம் ஹெல்மாண்டில் நடைப்பெற்ற கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் படைத்தளபதிகள் பலரும் அண்டை பகுதியான ஃப்ராவில் இருந்தும் பலர் கலந்து கொண்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்தது. மேலும், தலிபான் அமைப்பினர், இந்த மாதம் முதலே தாக்குதல் நடத்த இருப்பதாக அச்சுறுத்தியது எனவும் தெரிவித்தது. 

“அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யவே, இந்த சந்திப்பு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது” என்று கர்னல் மார்டின் ஓ’டோனல், ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகளின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

தலிபான் கிளர்ச்சியாளர்களின் முக்கிய இடங்களில் ஒன்றான பகுதியில், தாக்குதல் நடத்தியது, அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுதியிருக்கும் எனக் கூறினார். “இது குறிப்பிடதக்க தாக்குதலாக உள்ளது” என்று கூறியவர், கடந்த மாதம் பத்து நாட்களில், மூத்த மற்று இளைய வகுப்பு படைத்தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த தாக்குதலில், இரண்டு ஆப்கானிஸ்தான் முசா குலா குடிமக்களின் இல்லங்கள் தாக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளதாகவும், அதில் மூன்று பேருக்கு காயமும், ஐந்து பேர் இறந்துள்ளதாகவும் தலிபான் அமைப்பு கூறியது.

“இது குடுமக்கள் வாழும் இடம். இதற்கும் தலிபான் அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று குவாரி யூசப் அஹ்மதி, தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று, தொடர்ந்து வந்த தாக்குதலின் ஒரு பகுதியாக, வடக்கு மாகாணம் தக்கார், தஷ்ட் இ குவாலா பகுதியில் உள்ள தலிபான் அமைப்பினர் ஆளுநர் வசிக்கும் இடத்தின் சுவரையும், காவல் தலைமையகத்தையும் கைப்பற்றியதாக காவல் துறை செய்தித்தொடர்பாளர் கலீல் அசீர் கூறினார்.

லோகார் பகுதி, புல்-இ-அலாம் பகுதியில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய போது, மூன்று காவல் துறையினர் கொல்லப்பட்டதாகவும், எட்டு குடிமக்களும், மூன்று காவலர்களும் காயம் அடைந்ததாகவும் தலிபான் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஷாபூர் அஹ்மத்சே, மாகாண ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, "காலை விடியும் வேளையில், மூன்று தாக்குதல் படையினர் காவல் நிலையத்தை நோக்கி சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் உயிர் இழந்தனர்" என்றார்.

தெற்கு கண்டஹார் பகுதியை சேர்ந்த பிற பகுதிகளில் நடந்த தாக்குதலில், ஆப்கானிஸ்தான் படை வண்டிகளை சரிபார்க்கும் மெக்கனிக் கடைகளை நோக்கி தாக்கப்பட்டதில், மூன்று குடிமக்கள் கொல்லப்பட்டனர், 13 பேர் காயம் அடைந்தனர் என்று மாகாண ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் கூறினார். 


(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.