இதனால் இத்துறையில் மிகப்பெரிய வேலை வாய்ப்பிழைப்பு ஏற்படும்.
Mumbai: 2019 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் உள்ள ஏடிஎம்களில் செயல்படாத நிலையிலிருக்கும் 50% ஏடிஎம்கள் மூடப்படும் என்று ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஏடிஎம் தொழில் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், இந்தியாவில் தற்போது ஏறத்தாழ 2,38,000 ஏடிஎம்கள் உள்ளன.
அதில், போதுமான செயல்பாடுகள் இல்லாத 1,13,000 ஏடிஎம்கள் மூடப்பட உள்ளன. இவற்றில் 1,00,000 ஏடிஎம்கள் வங்கி கிளை இல்லாத இடங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் உள்ளவை. மேலும், 15,000 ஏடிஎம்கள் வங்கி அல்லாத வேறு நிறுவனங்களால் நடத்தப்படுபவை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஏடிஎம்கள் மூடப்படுவதன் மூலம், பிரதான் மந்திரி ஜன் தான் யோஜனா திட்டத்தின் மூலம் ஏடிஎம்களில் மானியத்தை எடுத்து வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, மக்கள் கூட்டமாக ஏடிஎம்களில் நின்றது போல, தற்போது ஏடிஎம்கள் மூடப்படுவதன் மூலம் மீண்டும் அதே நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், ஏடிஎம் தொடர்பான தொழிலில் பெருமளவில் வேலையிழப்பு ஏற்படும் என்றும் ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.