This Article is From Feb 01, 2019

வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா சென்ற 50 அரசுப்பள்ளி மாணவர்கள்

3 கோடி ரூபாய் செலவில் ஃபின்லாந்து நாட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

மரம் வளர்த்தால் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Highlights

  • தமிழக மாணவர்கள் 50 பேர் பின்லாந்து நாட்டிற்கு கல்விச்சுற்றுலா
  • ரூ. 3 கோடி செலவில் மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா
  • மரம் வளர்த்தால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்

அரசுப் பள்ளி மாணவர்கள் 50 பேர் வெளி நாட்டிற்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர். இதற்காக ரூ. 3 கோடியை தமிழக அரசு செலவு செய்திருக்கிறது. 

இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

தமிழகத்தை கல்வியில் முன்னோடியாக திகழச்செய்யும் நோக்கில் ரூ.3 கோடி நிதியில், அரசுப்பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்து நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல், மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் தலா 25 மாணவர்கள் அனுப்பப்படவுள்ளனர். 

Advertisement

இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதேபோன்று மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்கள் மரம் வளர்த்தால் கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. 

Advertisement