Read in English
This Article is From Dec 24, 2018

அரியானா: பனி மூட்டதால் ஒன்றுக்கொன்று மோதிய 50 வாகனங்கள் - 8 பேர் உயிரிழப்பு

அரியானாவின் ஜஜ்ஜார் பகுதிக்கு அருகே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 6 பேர் பெண்கள்.

Advertisement
இந்தியா

வாகனத்தின் சேதம் அடைந்த பகுதிகளை படத்தில் காணலாம்.

Highlights

  • பனி மூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கிறது
  • உயிரிழந்த 8 பேரில் 7 பேர் பெண்கள்
  • வட இந்தியாவின் பல பகுதிகளிலும் பனி மூட்டம் காணப்படுகிறது.
Jhajjar:

அரியானாவில் கடும் பனி மூட்டம் காரணமாக சுமார் 50 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் பெண்கள்.

அரியானா மாநிலத்தின் வழியே ரோதக் - ரெவாரி நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை டெல்லி மற்றும் அரியானாவை இணைக்கிறது. இங்கு இன்று அதிகாலையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டதால், வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து சென்றன.

விபத்துக்குள்ளான வாகனங்களில் பள்ளி வாகனங்களும், கார்களும் உள்ளடங்கும்

ஜஜ்ஜார் என்ற பகுதிக்கு அருகே வாகனங்கள் வந்து கொண்டிருந்தபோது, பனி மூட்டம் காரணமாக முன்னால் சென்ற வாகனங்கள் தெரியவில்லை. இதையடுத்து, சுமார் 50 வாகனங்கள் ஒன்றுக் கொன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். இந்த விபத்து காரணமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் இன்று காலை பனி மூட்டம் காணப்பட்டது.

இதேபோன்று டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இன்று காலையில் பனி மூட்டம் காணப்பட்டது.
வடமேற்கு இந்தியாவில் ஏற்பட்டு காற்று மாசு, பனி மூட்டத்துடன் சேர்ந்துள்ளதால் முன்னால் வரும் வாகனத்தை பார்ப்பதில் ஓட்டுனர்களுக்கு சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

Advertisement