குழந்தையைக் கடத்தியவர் கைது
Pollachi: பொள்ளாச்சியில் இன்று காலை அரசு மருத்துவமனையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி பிறந்த குழந்தையை திருடிச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட மாரியம்மா பிறந்து 5 நாளே ஆன குழந்தையை ஞாயிறு அன்று திருடியுள்ளார். குழந்தையின் பழங்குடியின பெற்றோர் அண்ணாமலை அருகில் உள்ள நரிகல்பதி கிராமத்தை சேர்ந்தவர்கள். மாரியம்மாவின் கணவர் அதே மருத்துவமனையில் ஆண்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்மணி குழந்தையை கவனித்துக் கொள்வேன் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சில மணி நேரங்களில் பிறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார் என்று ஏஎன் ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
பெற்றோர்கள் அலறியடித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறியபோது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பொள்ளாச்சியில் இரண்டு சிறப்பு காவல்துறை அணிகள் பெண்மணியை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.