This Article is From Jun 15, 2019

கூடுதலாக பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற வாகனங்கள் மீது 500 வழக்குகள்

பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோ மற்றும் வேன்கள் மீது 246 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

கூடுதலாக பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற வாகனங்கள் மீது 500 வழக்குகள்

ஓட்டுநர்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை அறிந்து கொள்ளும் சோதனைகளும் செய்யப்பட்டன.

Hyderabad:

ஹைதராபாத்தில் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டனர். கடந்த இரண்டு நாட்களில் வாகனத்தின் தாங்கு திறனை விட கூடுதலாக குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீதும் 521 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 

பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோ மற்றும் வேன்கள் மீது 246 வழக்குகள் போடப்பட்டுள்ளன. நகர காவல்துறையினர் போக்குவரத்து காவல்துறையினருடன் சேர்ந்து  சோதனைகளை நடத்தினர்.  ஓட்டுநர்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை அறிந்து கொள்ளும் சோதனைகளும் செய்யப்பட்டன. பள்ளி வாகன ஓட்டுநர்கள் காவல்துறை வழிகாட்டுதலுக்கு இணங்குவதாகக் கூறினார்கள். 

ஒரு ஆட்டோவில் ஆறு பள்ளி குழந்தைகளை எங்கள் ஆட்டோவில் சுமந்து செல்கிறோம். போக்குவரத் போலீசார் வழங்கும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுகிறோம் என்று பள்ளி ஆட்டோ ஓட்டுநர் சங்கர் யாதவ் கூறினார். 

.