This Article is From Jun 29, 2020

'தமிழ்நாடு முழுவதும் உள்ள 500 சிறப்புமிக்க மாணவர்கள்' - 100 % ஸ்காலர்ஷிப் வழங்கும் பிரபல தனியார் நிறுவனம்..!!

தேர்வு ஆன்லைன் முறையில் வருகின்ற 2020 ஜூலை 1ம் தேதியன்று நடத்தப்படுகிறது

Advertisement
தமிழ்நாடு Posted by

இந்தியாவின் முன்னணி நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஒன்றான வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி ஆண்டு அட்வான்ஸ்டு ஸ்டீல் (VISTAS), இந்த உயர் கல்வி நிலையத்தில் வழங்கப்படும் 46 கல்வித்திட்டங்களுள் எதிலாவது சேர விரும்புகிற மாணவர்களுக்காக V-SAT என அழைக்கப்படும் ஸ்காலர்ஷிப் நுழைவுத்தேர்வு ஆன்லைனில் நடத்தவிருக்கிறது. 

தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த 500 திறன்மிக்க சிறப்பான மாணவர்களை (மாவட்ட வாரியாக) அவர்களது தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் V-SAT அடையாளம் காணும் மற்றும் VISTAS வழங்குகிற 46 கல்வி திட்டங்கள் எதிலாவது சேருகின்ற இந்த மாணவர்களுக்கு கல்வித் திட்ட காலம் முழுவதற்கும் கல்வி கட்டணத்தில் 100% ஸ்காலர்ஷிப் வழங்கும். கூடுதலாக V-SAT தேர்வுக்காக தங்களை இணைத்துக் கொண்டு இருக்கின்ற மாணவர்கள், மெரிட் பட்டியலின் அடிப்படையில் 75 சதவிகிதம் வரை கல்விக்கட்டணத்தில் ஸ்காலர்ஷிப் பெறமுடியும். 

+2 முடித்துள்ள மாணவர்கள் அல்லது 2020 ஆம் ஆண்டில் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்ற மாணவர்கள் இந்த ஸ்காலர்ஷிப் நுழைவுத்தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆன்லைன் தேர்வு எந்த போர்டு வழிமுறைகளில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 45 நிமிடங்கள் கால அளவை கொண்ட இத்தேர்வில் அளவின செயல்திறன், செயல்திறன் மற்றும் பகுப்பாய்வு சார்ந்த அறிதிறன், ஆகியவை மீதான கேள்விகள் இடம்பெறும். தேர்வு ஆன்லைன் முறையில் வருகின்ற 2020 ஜூலை 1ம் தேதியன்று நடத்தப்படுகிறது. 

Advertisement

Advertisement
Advertisement