This Article is From May 14, 2020

கேரளாவில் 51 கிலோ எடைகொண்ட பலாப்பழம்! கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கை

ஏற்கனவே அதிக எடை கொண்ட பலாப்பழம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் எடை 42.72 கிலோ ஆகும். அதனை விட தற்போது கண்டறியப்பட்டுள்ள பலாப்பழத்தின எடை சுமார் 8 கிலோ அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Edited by

மனிதர்களின் சாதனைகள் மற்றும் இயற்கையின் அதிசயங்கள் ஆகியவை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்படும். 

Kollam (Kerala):

கேரள மாநிலம் கொல்லத்தில் பலாப்பழம் ஒன்று 51.4 கிலோ கிராம் எடை அளவுக்கு மரத்தில் பழுத்துள்ளது. இந்தளவு அதிக எடை கொண்டதாக பலாப்பழம் இல்லாத காரணத்தால் இதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

எடமுலக்கல் என்ற கிராமத்தில் ஜான் குட்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில்தான் இந்த ராட்சத பலாப்பழம் பழுத்திருக்கிறது.

மொத்தம் 97 சென்டி மீட்டர் நீளம் கொண்ட இந்த பலாப்பழம், 51.4 கிலோ எடை உள்ளதாக அளவிடப்பட்டுள்ளது.

Advertisement

ஏற்கனவே அதிக எடை கொண்ட பலாப்பழம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் எடை 42.72 கிலோ ஆகும். அதனை விட தற்போது கண்டறியப்பட்டுள்ள பலாப்பழத்தின எடை சுமார் 8 கிலோ அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விவசாயி ஜான் குட்டி கூறுகையில், 'இணையத்தில் தேடிப் பார்த்தேன். 42.72 கிலோ கொண்ட பலாப்பழம்தான் அதிக எடை கொண்டதாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தது. எனவே, எனது பலாப்பழத்தை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கோரி விண்ணப்பித்துள்ளேன். லிம்கா புத்தத்தில் இடம்பெறவும் விண்ணப்பம் செய்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார். 

Advertisement

மனிதர்களின் சாதனைகள் மற்றும் இயற்கையின் அதிசயங்கள் ஆகியவை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்படும். 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement