This Article is From Jun 20, 2018

'சட்டவிரோதமாக குடியேறிய' 52 இந்தியர்கள் அமெரிக்காவில் கைது!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர் என்று கூறி 52 இந்தியர்கள் உட்பட 123 பேர் கைது செய்யப்பட்டனர்.

'சட்டவிரோதமாக குடியேறிய' 52 இந்தியர்கள் அமெரிக்காவில் கைது!

ஹைலைட்ஸ்

  • 52 இந்தியர்களில் பெரும்பாலும் சீக்கியர்களே இருக்கின்றனர் எனத் தகவல்
  • மொத்தமாக 123 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்
  • எல்லையிலேயே அகதிகளாக வந்தவர்களை பிடித்துள்ளது அமெரிக்கா
Washington: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர் என்று கூறி 52 இந்தியர்கள் உட்பட 123 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்தியர்களில் பெரும்பான்மையானோர் சீக்கியர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

வங்க தேசம், சீனா, பிரேசில், மெக்சிக்கோ, பெரு, நேபால், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர் என்று கூறி அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் தஞ்சம் கொடுக்கமாறு கேட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு ஓரிகன் மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயக கட்சியினர் நேரில் சென்று பார்த்தனர்.

அவர்கள், ‘சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபர்கள், அவர்கள் நாட்டில் மதம் சார்ந்தும் மற்றும் பல விஷயங்கள் சார்ந்தும் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். இந்த காரணத்திற்காக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. அகதிகள் விஷயத்தில் ட்ரம்ப் தலைமையிலான அரசு, எந்தவித சமரசமும் இல்லை என்ற கொள்கையோடு செயல்படுவது நல்லதற்கல்லய என்று வருத்தம் தெரிவித்தனர். 

அகதிகளா வந்தவர்களை அமெரிக்க அரசு, எல்லையிலேயே மடக்கிப் பிடித்துள்ளது. இதையடுத்து, ஆண்களை அவர்கள் குடும்பத்திடமிருந்து பிரித்து தனியாக சிறையில் அடைத்து வைத்துள்ளது. இதனால், தங்களது குடும்பங்களுக்கு என்ன ஆயிற்று என்பது கூட தெரியாமல் வாடி வருகின்றனர் பலர்.

இது குறித்துப் பேசிய ஜனநாயகக் கட்சியினர், ‘எந்த கொள்கை வேண்டுமானாலும் உங்கள் அரசுக்கு இருக்கட்டும். அதற்கு ஒரு குடும்பத்தை இப்படிப் பிரிப்பது நியாயமில்லை. இது அமெரிக்காவுக்குத் தான் அவமானம்’ என்றனர் கோபத்துடன்.

இந்த 124 பேர் அல்லாமல், அமெரிக்கா சட்டவிரோதமாக குடியேற முயன்றனர் என்று கூறி இதுவரை 1600 பேரை சிறையில் அடைத்து வைத்துள்ளது.  
.