This Article is From Oct 23, 2019

சென்னை: பசு வயிற்றிலிருந்து 50 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்! பரிதவித்த வாயில்லா ஜீவன்!!

ஊசி, நாணயம் உள்ளட்டவையும் பசுவின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. நுணுக்கமாக செயலாற்றி பிளாஸடிக் கழிவுகளை அகற்றிய மருத்துவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.

சென்னை: பசு வயிற்றிலிருந்து 50 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்! பரிதவித்த வாயில்லா ஜீவன்!!

கழிவு அகற்றப்பட்ட பசுவுடன் கால்நடை மருத்துவர்கள்.

Chennai:

சென்னையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பசு ஒன்றின் வயிற்றிலிருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், ஊசி, நாணயம் உள்ளிட்டவைகளை கால்நடை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றியுள்ளனர். தான் உட்கொண்டது என்னவென்றே தெரியாமல் கடந்த சில நாட்களாக பசு பரிதவித்துக் காணப்பட்டது. 

சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த முனிரத்னம் என்பவருக்கு சொந்தமான பசு ஒன்று, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. கழிவுகளை வெளியேற்ற முடியால் சிரமப்பட்டிருந்த அதனை அவர் வேப்பேரி கால்நடை மருத்துவனையில் சேர்த்துள்ளார்.

அங்கு பசுவை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் வயிற்றுக்குள் பெரிய அளவில் கழிவுப் பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் பசுக்கு சுமார் 5 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து, கழிவுகளை வெளியே கொண்டு வந்தனர். 

இதில் 52 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள், ஊசி, நாணம், நகங்கள் உள்ளிட்டவை காணப்பட்டன. கிலோக்கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பசுவின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

19cdcjn

Doctors removed plastic, needles and coins from the cow's stomach.

வளர்ந்து வரும் நகர்மயமாதல் காரணமாக கால்நகடைகளுக்கு ஏற்ற உணவுப் பொருட்கள் சென்னையில் கிடைப்பது குறைந்து வருகிறது. இதனால் அவை காய்கறி, தாவர கழிவுகளை உட்கொள்ளும்போது அவற்றுடன் சேர்ந்து பிளாஸ்டிக் பொருட்களும் உள்ளே சென்று விடுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்தினால் மட்டுமே, பசு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு ஆபத்து நேராமல் பாதுகாக்க முடியும்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.