India Coronavirus Cases: இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு; 904 பேர் உயிரிழப்பு!
New Delhi: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் புதிதாக 56,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 19,64,536ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதேபோல், ஒரேநாளில் 904 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 40,000ஐ கடந்துள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்ட தொடக்கத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களில் 13,18,336 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 67.61ஆக உள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாட்டில் ஒரே நாளில் 6,64,949 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் இதுவரை 2.21 கோடி மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஒரு நோயாளி குணமடையும் வரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.
இதேபோல், மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 700,000 லட்சத்தை கடந்துள்ளது.