This Article is From Jun 06, 2020

அமலாக்க இயக்குநரக அதிகாரிகளுக்கு கொரோனா! தலைமை அலுவலகத்திற்கு சீல்!!

தற்போது வாரத்திற்கு இருமுறை தங்களது கட்டித்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தி வருகின்றது. வேளையை பொறுத்து ஊழியர்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்தி வருகின்றது.

அமலாக்க இயக்குநரக அதிகாரிகளுக்கு கொரோனா! தலைமை அலுவலகத்திற்கு சீல்!!

அமலாக்க இயக்குநரகம் அதன் அலுவலக கட்டிடத்தை வாரத்திற்கு இரண்டு முறை சுத்தப்படுத்துகிறது. (கோப்பு புகைப்படம்)

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.36 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், சமீபத்தில் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் இயக்குநரக தலைமையகம் இரண்டு நாட்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் உள்ள 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக சமீபத்தில் இளம்- நிலை அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டார். அவர் மத்திய துணை ராணுவப் படையிலிருந்து புலனாய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

பணமோசடி மற்றும் ஹவாலா குற்றங்களை விசாரிக்கும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமலாக்கத்துறையானது, தற்போது வாரத்திற்கு இருமுறை தங்களது கட்டித்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தி வருகின்றது. வேளையை பொறுத்து ஊழியர்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்தி வருகின்றது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2,36,657 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,15,942 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 1,14,073 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 6,642 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,887 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

மே 1 முதல் புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில் சேவையை மத்திய அரசு அனுமதித்ததையடுத்து சில மாநிலங்களில் தொற்று பரவல் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தினை கடந்தது.

With inputs from PTI

.