हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 13, 2019

அசாமில் வெள்ள பெருக்கு : 6 பேர் பலி, 8 லட்சம் மக்கள் பாதிப்பு

பிரம்மபுத்திர உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement
இந்தியா Edited by
Guwahati:

அசாமில் கொட்டிதீர்த்த பருவமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  வடகிழக்கு மாநிலத்தின் 27 மாவட்டங்களில் குறைந்தது 21 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. 

பிரம்மபுத்திர உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

27,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் 7,000க்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் 68 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அருணாசல பிரதேசத்தில் சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள தவாங்கில் ஏற்பட்ட நிலச்சரிவி இரண்டு பள்ளி மாணவர்கள் இறந்தனர். செவ்வாய்கிழமை முதல் பலத்த மழை பெய்த நிலையில் நிலச்சரிவுகள் அதிக பகுதிகளை துண்டித்தன.

Advertisement

தேமாஜி, லக்கிம்பூர் மற்றும் பொங்கைகான் மற்றும் பர்பேட்டாஆகிய பகுதிகள் மோசமாக பாதிப்படைந்துள்ளன. உயர் பகுதிகளில்  உள்ள வெள்ளநீர் தாழ்வான பகுதிகளை நோக்கி பாயும். 17 மாவட்டங்களில் 85,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்குமிடம் கேட்பதால் பர்பேட்ட பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. என்று அசாம் மாநில பேரிட மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் துணை ஆணையர்களுடன் வியாழக்கிழமை வீடியோ மூலம் முதலமைசர் சர்பானந்தா சோனோவால் பேசினார். 24 மணிநேர கட்டுபாட்டு அறை அமைக்கவும் அவசரகாலத்தில் உதவி கோரும் மக்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டார்.

Advertisement
Advertisement