மொத்தம் 6 மலைப் பாம்புகள் ஒடிசாவில் பிடிக்கப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தில் 6 மலைப் பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோ ஒன்றை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவற்றில் ஒரு பாம்புடைய நீளம் வனத்துறையினரையே ஆச்சரிய்ப்படவைத்துள்ளது. மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் வனத்துறையினர் மொத்தம் 6 பாம்புகளை பிடித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் தேன்கணல் மாவட்டத்தில் காங்கிரீட் பைபுகளுக்குள் மலைப்பாம்புகள் புகுந்துள்ளன. இவற்றை சப்தசாஜியா கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து அதிர்ந்து போனார்கள். அவர்கள் கிராம மக்களிடம் தகவலை சொல்ல, வனத்துறையினருக்கு பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பாம்புகளை பிடிக்கத் தொடங்கினர். இதற்காக ஜே.சி.பி. எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 18 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய மலைப்பாம்பு பிடிபட்டது.
பாம்புகள் அனைத்தும் பின்னர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா, மலைப்பாம்பின் நீளம் எவ்வளவு இருக்கும் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அளந்து பார்த்தபோது பெரிய பாம்பு 18 அடி நிளமும், 16 நீளத்தில் ஒரு பாம்பு இருந்தன. மற்றவை 10 முதல் 12 அடி நீளம் கொண்டவையாக இருந்தன.
குமுர்தாங்கர் என்ற வனப்பகுதிக்குள் 6 பாம்புகளும் பத்திரமாக விடப்பட்டன.
தெற்காசியாவை பூர்வீமாக கொண்டவை இந்த மலைப் பாம்புகள். அவற்றில் பர்மாவை சேர்ந்த பாம்புகள்தான் உலகிலேயே அதிக நீளம் கொண்டவையாக உள்ளன. நேஷனல் ஜியோகிராபிக் அளித்த தகவலின்படி இந்த பாம்புகள் 23 அடி நீளம் வரைக்கும் வளருமாம்.
Click for more
trending news