This Article is From Feb 25, 2020

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு!

எச்1என்1 வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிபவர்களுக்குத் தடுப்பூசி போடுமாறு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவிடன் வலியுறுத்தியதாக நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு!

வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்துக்கு தலைமை நீதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

New Delhi:

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக உரிய மருத்துவ பாதுகாப்பு அளிக்கத் தலைமை நீதிபதியிடம் மூத்த வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிபதிகளுக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த வந்த சபரிமலை வழக்கு, உட்பட இரண்டு வழக்குகளின் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளன. 

பன்றிக் காய்ச்சலை ஹெச்1என்1 என்ற வைரஸ் உருவாக்குகிறது. இந்த ஹெச்1என்1 வைரஸ் முதன்முதலாகப் பன்றிகளிடம் இருந்து பன்றிகளை வளர்த்துக் கையாண்டு வந்த ஊழியர்களுக்கும், அதன் சிகிச்சையோடு தொடர்புடைய மருத்துவர்களுக்கும் பரவியது. அப்படியே பொதுமக்களுக்கும் இந்த காய்ச்சல் பரவியது. இந்தியாவைப் பொருத்தவரை 2009-ம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சந்திரசூட் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் ஊழியர்களுக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று தலைமை நீதிபதியிடம் நீதிபதி சந்திரசூட் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக நீதிபதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் உள்ளிட்டோருக்குத் தடுப்பூசி போடும்படி உத்தரவிடுமாறு தலைமை நீதிபதியிடம் தாம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இதுகுறித்து விவாதிக்க வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்துக்கு தலைமை நீதிபதி அழைப்பு விடுத்திருப்பதாகவும் நீதிபதி சந்திராசூட் கூறியுள்ளார்.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.  இது தொடர்பான அவசரக்கால சூழ்நிலைகளைக் கவனித்துக்கொள்வதற்குத் தேவையான வழிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

.