This Article is From Aug 06, 2018

வெனிசுலா அதிபரை கொல்ல முயன்ற 6 ‘தீவிரவாதிகள்’ கைது!

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக ரெவரோல் கூறியுள்ளார்

வெனிசுலா அதிபரை கொல்ல முயன்ற 6 ‘தீவிரவாதிகள்’ கைது!
Caracas, Venezuela:

வெனிசுலா அதிபர், நிகோலஸ் மதுரா நேற்று ஒரு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் மீது ஆயுதம் தாங்கிய தானியங்கி ட்ரோன்களை வைத்து கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு நிதித்துறை மற்றும் உள்துறை அமைச்சரான நெஸ்டர் ரெவரோல், ‘இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பல உணவகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளன. இந்த ரெய்டுகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதிபரை கொலை செய்யும் இந்த சதி முயற்சி 2 தானியங்கி ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்டது. ஆனால், இரண்டுக்குமே சரியாக சிக்னல் கிடைக்கததால் அதிபரை அது தாக்கவில்லை. இந்த தாக்குதலில் 7 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றது. தொடர்ந்து இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது நடவடிக்கை தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக ரெவரோல் கூறியுள்ளார்.

வெனிசுலா அதிபர் மதுரா மீது குறிவைக்கப்பட்ட இந்தத் தாக்குதலினால் அந்நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது.

.