Read in English
This Article is From Feb 07, 2019

‘’இந்தியாவில் நகர்ப்புறங்களில் 60% கழிவு நீர் பராமரிக்கப்படவில்லை’’

நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவு நீர் பெரும்பாலும் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலந்து அங்கும் மாசை ஏற்படுத்துவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா

முறைப்படுத்தப்படாத நகர்ப்புற கழிவு நீர் மாசை ஏற்படுத்துகின்றன.

New Delhi:

இந்தியாவில் நகர்ப்புறங்களில் 60% கழிவு நீர் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், அவை நீர் நிலைகளில் கலந்து மனிதன் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசை ஏற்படுத்துவதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

இந்த பாதிப்பு என்பது மிகவும் சீரியஸான விஷயம் என்று குறிப்பிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், சுற்றுச் சூழல் பாதிப்பு விதிகள் திருப்திகரமாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் திருமணிமுத்தார் ஆற்றில், தொழிற்சாலை கழிவுகள் அதிகம் கலப்பதாகவும், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ‘'தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க ரூ. 50 லட்சத்தைஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை 3 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியது வரும்.

Advertisement

சுற்றுச் சூழல் பாதிப்பால் மனிதர்களின் உடல் நிலையும் மாசடைந்து வருகிறது. இதனை உடனடியாக சரி செய்யவேண்டும். சுற்றுச் சூழல் மாசடையும் விவகாரத்தில் அலட்சியம் காட்டக் கூடாது.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement