ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் தனிநபர் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 68 சதவீதம் உள்ளது.
New Delhi: கடந்த 4 வருடங்களில், ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் தனிநபர் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1.40 லட்சமாக அதிகரித்துள்ளது. இது சுமார் 60 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய நேரடி வரிகளின் வாரியம் தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்டு காலத்திற்கான வருமான வரி மற்றும் நேரடி வரி செலுத்துவோர் குறித்து மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் இன்று வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையின்படி, அதிகமாக சம்பாதித்ததாக வரி செலுத்தியவர்கள் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது.
2014-15-ம் ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்ததாக வரி கட்டியவர்கள் எண்ணிக்கை 88 ஆயிரத்து 649லிருந்து, நடப்பு நிதியாண்டு 2017-18-ல் 1,40,139ஆக 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில் தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 48,416-ல் இருந்து 81,344 ஆக 68 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக அரசின் சட்டரீதியான, தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த உயர்வுக்கு காரணம் என மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.