அந்த பெண்ணை சுட்டதற்கு பின்னர் அந்த நபர் அங்கு தரையில் அமர்ந்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- நடுரோட்டில் பெண் சுட்டுக்கொலை! வேடிக்கை பார்த்த அக்கம்பக்கத்தினர்
- பக்கத்து வீட்டு மாடியில் இருந்து மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர்
- வீடியோ எடுத்த அக்கம்பக்கதினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்
Lucknow: உத்தர பிரதேசத்தில், சாலையில் நெருங்கிய தூரத்தில் இருந்த படி, 60 வயது பெண் ஒருவரை துப்பாக்கியால் சுடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ அக்கம்பக்கத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அந்த வீடியோவில், கஸ்கஞ்சில் அடர்ந்த சுற்றுப்புறத்தில் உள்ள கட்டிடங்கள் நிறைந்துள்ள தெருவின் கீழ் நின்றபடி, நாட்டு துப்பாக்கியை காட்டி, சாலையில் அமர்ந்திருக்கும் அந்த பெண்ணை மிரட்டி வருகிறார். அப்போது, அந்த பெண் எழுந்து தனது வீட்டிற்குள் ஓட முயற்சி செய்கிறார்.
ஆனால், அதற்குள் அந்த நபர் சுட்டுவிடுகிறார். இதில், மீண்டும் கீழே விழும் அந்த பெண் வலியில் கதறுகிறார். எனினும், அக்கம்பக்கத்தினர், இதனை தடுக்க எந்தவித முயற்சியும் எடுக்காமல் நடந்த சம்பவத்தை வீடியோ எடுத்தபடியே இருக்கின்றனர். இதனிடையே, அந்த நபர் தனது துப்பாக்கியை சரி செய்து இரண்டாவது முறையும் சுடுகிறார்.
இதையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் மோனு என்று தெரிகிறது. எனினும், அந்த பெண்ணை அவர் எதற்காக சுட்டுக்கொன்றார் என்ற காரணம் தெரியவில்லை.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு உதவிய மற்றொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தடுக்காமல் வீடியோ எடுத்த அக்கம்பக்கதினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.