This Article is From Aug 09, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக அளவு புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா!

இதுவரை 43,000 க்கும் மேற்பட்ட கோவிட்-தொடர்புடைய இறப்புகள் பதிவாகியுள்ளன.

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 21,53,010  ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 64,399 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 861 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பானது 43,379 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவின் மீட்பு விகிதம் 68.78 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இந்த விகிதம் 68.32 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா, முதல் இரண்டு நாடுகளின் ஒரு நாள் எண்ணிக்கையை காட்டிலும் இந்தியா கடந்த ஐந்து நாட்களாக அதிகபட்ச புதிய கொரேனா நோயாளிகளை பதிவு செய்து வருகிறது. கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 58,173 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில் 49,970 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த இரண்டு தினங்களில் 1 லட்சம் புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக நாடு முழுவதும் 60,000க்கும் அதிகமான புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக அளவு புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

.