This Article is From Oct 12, 2018

சிறுமியை பலாத்காரம் செய்த 64 வயது நபருக்கு இரட்டை ஆயுள்: தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு!

தஞ்சாவூரில் இருக்கும் மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், இந்த வழக்கை விசாரித்து, ராமையனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்

சிறுமியை பலாத்காரம் செய்த 64 வயது நபருக்கு இரட்டை ஆயுள்: தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 2012 ஆம் ஆண்டு, சிறிமியை பலாத்காரம் செய்த வழக்கில் 64 வயதுடைய ராமையன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் குறித்த விசாரணை தஞ்சாவூரில் இருக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு, விவசாயி ராமையன் ஒரு 11 வயது சிறுமியுடன் நட்புடன் பழகியுள்ளார். அப்போது அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சம்பவத்தை அடுத்து சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது நடந்த சோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு பாலியல் தொற்று நோயும் வந்திருந்தது தெரிந்தது. இதையடுத்து ராமையன், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூரில் இருக்கும் மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், இந்த வழக்கை விசாரித்து வந்தார். இதையடுத்து நேற்று, ராமையனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.