2006 முதல் இந்த போலி பாஸ்போர்டை பயன்படுத்தி வரும் குர்தீப், அதை வைத்தே ஹாங் காங்கில் நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுள்ளாராம்.
ஹைலைட்ஸ்
- ஹாங்காங்கில் இருந்து டெல்லி வரும்போது சிக்கினார் சிங்
- 11 ஆண்டுகளாக போலி பாஸ்போர்ட் மூலம் அவர் பயணம் செய்துள்ளார்
- பாதுகாப்பு அதிகாரிகளின் சந்தேகத்தால் சிக்கினார் சிங்
New Delhi: 68 வயது நபர் ஒருவர், 89 வயது நபர் போல வேடமிட்டு, போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி பயணம் செய்ய முற்பட்டு மாட்டிக் கொண்டார். டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக இருந்த அதிகாரிகளிடம் அவர் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.
இந்த போலி பாஸ்போர்டை பயன்படுத்தி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் அவர் விமானங்களில் பயணம் செய்துள்ளதாக போலீஸ் அதிர்ச்சித் தகவலைக் கூறுகிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் ஒரு வாலிபர், 81 வயது ஆள் போல வேடமிட்டு, விமானம் மூலம் பயணம் செய்ய முயன்றார். அவரையும் டெல்லி பாதுகாப்பு அதிகாரிகள்தான் கண்டுபிடித்தனர்.
குர்தீப் சிங் என்னும் 68 வயது நபர், ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு நேற்று வந்துள்ளார். அவர் போலி பாஸ்போர்ட் மூலம்தான் பயணம் செய்துள்ளார். அதில் அவரது பெயர் கர்னெய்ல் சிங் என்று இருந்துள்ளது. அந்த கடவுச்சீட்டுப்படி அவரின் வயது 89 என்றிருந்தது.
இது டெல்லியில் இருந்த அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வயதுக்கும் குர்தீப்பின் தோற்றத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்துள்ளது.
தொடர் சோதனைகளுக்குப் பின்னர் அவரின் உண்மை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. பசஞாபின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குர்தீப் என்பது கண்டறியப்பட்டது.
2006 முதல் இந்த போலி பாஸ்போர்டை பயன்படுத்தி வரும் குர்தீப், அதை வைத்தே ஹாங் காங்கில் நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுள்ளாராம்.