ஹைலைட்ஸ்
- பல் பிரச்னைகள் ஏற்பட வைட்டமின் சி குறைபாடுதான் காரணம்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி தேவைப்படுகிறது.
- சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி சத்து மிகுதியாக இருக்கும்.
உடலுக்கு தேவையான சத்துக்களுள் வைட்டமின் சி மிகவும் முக்கியமானது. இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதல் இருதயத்தை பாதுகாக்கிறது. மேலும் நாட்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது. சரும ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் சி மிகவும் முக்கியமானது. உடலில் இரும்பு சத்து தங்குவதற்கும் வைட்டமின் சி தேவைப்படுகிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இந்த வைட்டமின் சி பற்றாக்குறை ஏற்பட்டால் உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
1. வறட்சி:
உடலில் வைட்டமின் சி பற்றாக்குறை ஏற்பட்டால் சருமத்தில் வறட்சி ஏற்படும். வைட்டமின் சியில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமம் குணமாகும். மேலும் இந்த பற்றாக்குறையால் சருமத்தில் சுருக்கம் ஏற்படும்.
2. காயம்:
வைட்டமின் சி பற்றாக்குறையால் உடலில் ஏற்படும் காயங்கள் சரியாக நீண்ட நாட்களாகும். மேலும் நோய் தொற்று அதிகரிக்கும். பற்றாக்குறை காரணமாக காயம் அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
3. பல் பிரச்னை:
சருமம் மட்டுமல்லாது பற்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். வைட்டமின் சி குறைபாட்டால் உடலில் கொலாஜன் உருவாவது குறையும். இதனால் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படும். ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்னையும் ஏற்படும்.
4. இரத்த சோகை:
உடலில் வைட்டமின் சி சத்து குறைந்தால் இரும்பு சத்து குறைபாடும் ஏற்படும். இரும்பு சத்து குறைந்தால் இரத்த சோகை ஏற்படும். இரும்பு சத்துள்ள உணவை மட்டும் உட்கொண்டால் போதாது. கூடவே வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
5. நோய் எதிர்ப்பு சக்தி:
வைட்டமின் சி யில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.
6. உடல் பருமன்:
உடல் பருமனாக வைட்டமின் சி குறைபாடும் ஒரு காரணம். வைட்டமின் சி குறைபாடு ஏற்படும்போது உடலில் கொழுப்பு தேக்கம் அதிகரிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும்
7. சோர்வு:
உடலில் வைட்டமின் சி சத்து குறைவாக இருந்தால் எப்போதும் சோர்வாக இருப்பது போல உணருவீர்கள். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இரத்த சோகை ஏற்படும். உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் ஏற்படும்.