மொத்தமாக கடத்தப்பட்ட கடல் வாழ் உயிரனங்களின் எடை 660 கிலோ இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது
Chennai: 7 கோடி ரூபாய் மதிப்பிலான கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்ட பல கடல் வாழ் உயிரனங்களை கடத்த முயன்ற இருவர், சென்னையில் பிடிபட்டுள்ளனர்.
மொத்தமாக கடத்தப்பட்ட கடல் வாழ் உயிரனங்களின் எடை 660 கிலோ இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மண்ணடியில் இருக்கும் ஒரு குடோனிலிருந்து இந்த கடத்தலுக்குத் திட்டம் போடப்பட்டுள்ளது. ஆனால் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு இந்த கடத்தல் குறித்து தகவல் வந்துள்ளது. அதையடுத்து நடத்திய அதிரடி ரெய்டில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான இறந்த நிலையில் இருந்த கடல்வாழ் உயிரனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் படிக்க - "முதுமலையில் கட்டுப்படுத்தப்பட்ட காட்டுத் தீ"
சீனா மற்றும் தென் ஆசிய நாடுகளுக்கு இந்த கடல் வாழ் உயிரினங்கள் கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையிலிருந்து மும்பை வரை, இந்தப் பொருட்கள் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் தென் ஆசிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட இருந்ததாக தெரிகிறது.
‘உயிரனங்கள், ராமேஸ்வரம் மற்றும் சென்னை காசிமேட்டிலிருந்து குடோனுக்கு வந்திருக்கிறது. அதை குடோனில் வைத்து பதப்படுத்தி வெளியாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர்' என்று ரெயிடில் ஈடுபட்ட ஒரு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட இருந்த பல உயிரினங்கள் அழிவின் விளிம்புநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்த உயிரனங்களை வைத்து மிகவும் விலை உயர்ந்த சூப் செய்வதற்கும், மருத்துவப் பொருட்கள் செய்வதற்கும் பயன்படுத்துப்படுகின்றன.
மேலும் படிக்க - "ஜப்பானில் பிடிப்பட்ட அரியவகை மீன்"