This Article is From Jul 22, 2020

டெல்லி வரும் சர்வதேச விமானப் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்!

அனைத்து சர்வதேச பயணிகளும் இந்த ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலை ஏற்றுக்கொள்வதாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

டெல்லி வரும் சர்வதேச விமானப் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்!

டெல்லி விமான நிலையம் வரும் பயணிகள் தங்களது சொந்த செலவில், ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்

New Delhi:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச விமானங்கள் மூலம் டெல்லி விமான நிலையம் வரும் பயணிகள் தங்களது சொந்த செலவில், ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலிலும், அதைத்தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு வீட்டு தனிமைப்படுத்தலிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் வெளியிடப்பட்ட சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, (ஏழு நாட்கள் ஊதியம் பெற்ற நிறுவன தனிமைப்படுத்தலை ஏற்றுக்கொள்வதாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், இது முன்பதிவு உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய வெளிநாட்டு பணி அல்லது தூதரகத்தால் உறுதிப்படுத்தப்படும்.

மேலும், டெல்லியில் தங்க திட்டமிட்டுள்ள சர்வதேச பயணிகள் விமான நிலைய மருத்துவர்களால் உடல்நல பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், அதைத்தொடர்ந்து, டெல்லி அரசால் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள் என்றும் அதன் பின்னரே தனிமைப்படுத்தல் மையத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், கர்ப்பமான பெண்கள், குடும்பத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளவர்களோ, 10வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர்கள் உள்ளிட்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் இதற்காக அவர்கள் உரிய ஆவணங்களுடன், படிவங்களை பூர்த்தி செய்து airportcovid@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்ப வேண்டும். 

இதேபோல், அடுத்த விமானத்தில் பயணிக்க உள்ள பயணிகளும், இறங்கும் இடத்திலும், அடுத்த விமானத்திற்கு ஏறும் இடத்திலும் உடல் வெப்பநிலை சோதனை மேற்கொள்ள வேண்டும். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 648 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 11,92,915 ஆக உயர்ந்துள்ளது. இதில், குறைந்தது 7,53,050 பேர் வரை குணமடைந்துள்ளனர். 28,732 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, குணமடைபவர்களின் விகிதமானது, 63.12 சதவீதமாக உள்ளது. 

.