This Article is From Nov 21, 2018

ஒடிசாவில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு

30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தின் சுவரில் மோதி, ஆற்றுப்படுகையில் கவிழ்ந்தது.

ஒடிசாவில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு

இதுகுறித்து ஏஎன்ஐ அளித்த தகவலில், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • The driver of the bus lost control when the buffalo came in front of it
  • The bus rammed the side of the bridge and fell down to the riverbed below
  • All passengers trapped in the bus have been rescued and taken to hospital
Cuttack, Odisha:

ஒடிசாவின் கட்டாக் பகுதியில், எருமை மாட்டின் மீது பேருந்து மோதி பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருபது பேர் உயிரிழந்தனர். 

30 பேருடன் பயணித்த பேருந்து பாலத்தின் சுவரை தகர்த்து ஆற்றுப்படுகையின் மீது கவிழ்ந்தது. பேருந்திற்கு முன் திடீரென எருமை வந்ததால், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். 

எருமை மாட்டை காப்பற்ற கருதிய ஓட்டுநர் பேருந்தை திசை திருப்பியதாக, பிடிஐ-யிடம் பயணி ஒருவர் கூறியுள்ளார். 

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு இலவச கிசிச்சையும் வழங்கப்படுமென நவீன் பட்நாயக் உறுதியளித்துள்ளார். 

பேருந்தில் சிக்கியிருந்த பயணிகள் மீட்கப்பட்டு எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கிசிச்சைக்கு அனுப்பப்பட்டார்கள். 

.