हिंदी में पढ़ें বাংলায় পড়ুন
This Article is From Oct 11, 2019

நடைபாதையில் தூங்கிய பக்தர்கள் மீது பேருந்து ஏறியது! 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!

புனித கங்கை ஆற்றில் குளித்து விட்டு பக்தர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நடைபாதை ஓரமாக உறங்கியவர்களுக்கு அசம்பாவிதம் நடந்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from IANS)

சம்பவம் நடந்த இடத்தில் கூடிய மக்கள்.

Bulandshahr:

உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புலந்த்சாகர் மாவட்டத்தில் விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் குழந்தைகள் 3 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹதராஸ் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கங்கையாற்றில் குளிப்பதற்காக பாத யாத்திரை மேற்கொண்டிருந்தனர். திட்டமிட்டபடி, கங்கையாற்றில் குளிக்கும் நிகழ்ச்சிகள் முடிந்தன.

இதையடுத்து பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். புலந்த்சாரின் நரோரா பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது இரவில் தூங்கி ஓய்வெடுத்தனர்.

Advertisement

இந்த நிலையில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று சாலையோரம் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது ஏறியது. இதில் 4 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தார்கள். 

இந்த விபத்து நடந்தவுடன், பேருந்தின் ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பலியானவர்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Advertisement
Advertisement