This Article is From Apr 22, 2019

திருச்சி கோவில் திருவிழாவில் கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!

கோவில் திருவிழாவின் போது, பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது, பக்தர்கள் ஒருவரையொருவர் நெருக்கி தள்ளியதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி கோவில் திருவிழாவில் கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!

இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tiruchirappalli:

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முத்தயம்பாளையம் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் ஒருவரையொருவர் நெருக்கி தள்ளியதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்ந கோர சம்பவமானது, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கோவிலில் நடந்த பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சியின் போது நிகழ்ந்துள்ளது. படிக்காசு வழங்கும் நிகழச்சியின் போது, பக்தர்கள் ஒருவரையொருவர் நெருக்கி தள்ளியதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், நிதியுதவியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளனர். இதேபோல், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு முத்தையாம்பாளையம் கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதன் ஒருபகுதியாக பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

அப்போது காசை பெறுவதற்காக பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் பகுதியில் உள்ள இந்த கருப்பசாமி கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி இங்கு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.

இதில், கோவில் பூசாரியிடம் பெரும் படிக்காசுகளை தங்கள் வீடுகளில் உள்ள பணப்பெட்டியில் வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும். அதனால், இந்த திருவிழாவில் பங்கேற்க திருச்சி மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முத்தையம்பாளையம் வருகை தருவர்.

இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகள் கூறும்போது, கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், போதுமான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
 

.