This Article is From Jan 03, 2019

மக்களவையில் அமளி… 7 அதிமுக எம்.பி-க்கள் சஸ்பெண்டு!

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 7 அதிமுக எம்.பி-க்களை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்

மக்களவையில் அமளி… 7 அதிமுக எம்.பி-க்கள் சஸ்பெண்டு!

மக்களவையில் இன்று அதிமுக-வைச் சேர்ந்த எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 7 அதிமுக எம்.பி-க்களை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இன்று லோக்சபாவில் பூஜ்ஜியம் நேரம் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர், அதிமுக-வைச் சேர்ந்த எம்.பிக்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் சென்று, மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர். அப்படி செய்யும்போது, எம்.பி-க்கள் அரசுக்கு எதிரான பதாகைகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.

சபாநாயகர் எவ்வளவு சொல்லியும் கேட்காததால், அவர், 7 அதிமுக எம்.பி-க்களை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். நேற்று தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி-க்கள் 24 பேரை, அடுத்த 5 அமர்வுகளுக்கு வரக் கூடாது என்று சொல்லி சஸ்பெண்டு செய்தார் சபாநாயகர் மகாஜன். ஜனவரி 8 ஆம் தேதியுடன் குளிர்க்காலக் கூட்டத் தொடர் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

.