বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 03, 2019

ஜெய்பூரில் 7 வயது சிறுமிக்கு நிகழ்ந்த வன்புணர்வு : போராட்டத்தை தவிர்க்க இணையம் துண்டிப்பு

காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு படைகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சில மாவட்டங்களில் இணையம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

Advertisement
இந்தியா

சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது - காவல்துறை

Highlights

  • 7 வயது சிறுமி கடத்தப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் போராட்டம்
  • போராட்டக்காரர்கள் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர்
Jaipur:

ஜெய்பூரில் திங்கள் கிழமை மாலையில் 7வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சிறுமியின் தந்தைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று அழைத்து சென்றுள்ளார். சிறுமியைக் காணவில்லை என்று குடும்பத்தினர் அறிந்து தேடத் தொடங்கியுள்ளனர்.

ஏழு வயது சிறுமி 2 மணிநேரம் 15 நிமிடங்கள் கழித்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமனிஷா கால்வாய் அருகே கண்டுபிடிக்கப்பட்டார்.  சிறுமி தற்போது ஜெய்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார். 

சிறுமியை பெல்ட்டால் அடித்துள்ளதாகவும் தலையில் இரண்டு தையல் போடப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் உள்ளூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர், சிலர் வாகனங்கள் மற்றும் காரின் ஜன்னல்களும் நொறுக்கப்பட்டன.  காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு படைகளை நிறுத்த வேண்டிய  சூழல் ஏற்பட்டது. மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சில மாவட்டங்களில் இணையம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

காவல்துறையினர் செவ்வாய் கிழமை மாலை பல்வேறு சமூகத் தலைவர்களுடன் சந்திப்புக்கு பின்னர் சாஷ்த்ரி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 காவல் நிலையங்கள் உட்பட இணையம் நிறுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். 

Advertisement

“சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்பும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை நலமாக சிகிச்சைப் பெற்று வருகிறது. உடல்நிலை சீராக உள்ளது. குற்றவாளியைப் பிடிக்க 14 காவல்துறை குழு அமைத்துள்ளோம்” என்று  ஜெய்பூர் காவல் ஆணையர் ஆன்ந்த் ஶ்ரீவாஸ்தவா தெரிவித்தார். 

மக்களின் கோபத்திற்கு காரணம் 10 நாட்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவம் 4 வயது சிறுமிக்கு நடந்தது என்று தெரிவிக்கின்றனர்.

Advertisement

வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் விளக்கத்தின் அடிப்படையில் குற்றவாளியின் ஓவியத்தை வரைந்து 14 குழுக்கள் அமைத்து தேடி வருகின்றனர். 

Advertisement