This Article is From Apr 18, 2018

கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி உலக சாதனைபடைத்த 7 வயது ஹைதராபாத்

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் தென்னாப்பிரிக்காவின் தான்சானியாவில் உள்ள உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி

Advertisement
South

Samanyu Pothuraju, 7, scaled a height of 5,895 meters above the sea level on April 2.

Hyderabad: ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் தென்னாப்பிரிக்காவின் தான்சானியாவில் உள்ள உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி தேசியக்கொடியை நாட்டி புதிய சாதனை படைத்துள்ளான். சமான்யா போத்துராஜு என்ற அந்த ஏழு வயது சிறுவன் தனது பயிற்சியாளர் உதவியுடன் கடல்மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் உயரத்திலுள்ள அந்த சிகரத்தில் ஏப்ரல் 2ல்  எறியுள்ளார். சிறுவனின் இந்தப் பயணத்தில் அவனது அம்மா, பயிற்சியாளர், மற்றும் மலையேற்ற வீரர் சங்கபாணி சுர்ஜனா மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் சென்றுள்ளனர். இந்தப் பயணத்தில் தான்சானியாவின் மருத்துவர் குழுவை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் அவர்களுடன் சென்றுள்ளார். இதுகுறித்து அந்த சிறுவன் பேசும்போது, "அப்போது மழை பொழிந்தது, அதுமட்டுமல்லாமல் சாலைகள் மோசமாக இருந்தது. எனது காலில் சிறிது வலி இருந்ததால் எனக்கு சற்று பயம் இருந்தது. சிகரத்தை அடையும் முன் நான் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டேன், பனி எனக்கு மிகவும் பிடிக்கும், நான் கிளிமாஞ்சாரோ ஏறுவதற்கு இதுவும் ஒரு காரணம். சிகரம் எரிய  (ஏறிய) பின் நான் நடிகர் பவன் கல்யாணி (கல்யாணைச்) சந்தித்தேன், எனக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். நான் அவரது மிகப்பெரிய ரசிகர். நான் சிகரத்தை வெற்றிகரமாக ஏறினாள் (ஏறினால்) எனது அம்மா அவரை சந்திக்க வைப்பதாக கூறினார். அடுத்ததாக நான் ஆஸ்திரேலியாவில் உள்ள சிகரத்தில் அடுத்தமாதம் எற உள்ளேன்" என கூறினார். இது குறித்து அவரது அம்மா கூறும்போது, "பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்ததால் நான் மிகவும் பயந்தேன். மேலும் பாதியிலே நிறுத்திவிடலாம் எனவும் நினைத்தேன். ஆனால், இப்போது நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன், எனது மகன் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்துள்ளான். அடுத்தமாதம் அவன் ஆஸ்திரேலியாவில் உள்ள சிக்கட்டத்தில் (சிகரத்தில்) எற (ஏற) உள்ளான்" எனக் கூறினார்.

 
Advertisement