This Article is From Jun 14, 2018

7வயது சிறுவனைக் கொன்ற சிறுத்தை, கோபத்தில் காட்டை எரித்த கிராம மக்கள்

கடந்த மூன்று மாத காலத்தில்  சிறுத்தையின் தாக்குதல் இரண்டாம் முறை நடப்பதாக கூறுகிறார் காவல் துறை அதிகாரி

7வயது சிறுவனைக் கொன்ற சிறுத்தை, கோபத்தில் காட்டை எரித்த கிராம மக்கள்

The leopard killed the boy after dragging him inside the forest surrounding his house (representative)

ஹைலைட்ஸ்

  • பகேஷ்வரில் சிறுத்தை நடத்தும் இரண்டாவது தாக்குதல்
  • மார்ச் மாதம் 4 வயது சிறுவன சிறுத்தையால் கொல்லப்பட்டான்
  • சிறுத்தையை சுட்டுத் தள்ள உத்தரவளிக்கப்பட்டுள்ளது
Dehradun: டேராடூன் : உத்தரகாண்ட்  பகேஷ்வர் (Bageshwar) மாவட்டத்தில் 7 வயது சிறுவனை சிறுத்தை கொன்றதால் கோபமடைந்த கிராமத்தினர் எட்டு ஹெக்டேர் காட்டை ஏரித்து சாம்பல் ஆக்கினர். கடந்த மூன்று மாத காலத்தில்  சிறுத்தையின் தாக்குதல் இரண்டாம் முறை நடப்பதாக கூறுகிறார் காவல் துறை அதிகாரி.

இத்தாக்குதல் திங்கட்கிழமை மாலை ஹரிநாக்ரி கிராமத்தில் சிறுவன், தனது விட்டை விட்டு வெளியில் சென்ற போது நடந்தது. அப்போழுது அவன் தாய் சமையலறையில் இருந்தாக கூறுகிறார், வனத்துறை முதன்மை ஆலோசகரி  குப்தா.

மேலும் குப்தா கூறுகையில் ,சிறுத்தை சிறுவனை விட்டின் அருகில் இருக்கும் காட்டுப் பகுதிக்குள் இழுத்து சென்றதாகவும், அவனது உடல் பாதி தின்ற நிலையில் 250 மீட்டர் தொலைவில் கிராமத்தினர்  மீட்டேடுத்ததாகவும் கூறினார்.

“4000 முதல் 5000 கிராமத்தினர் ஒன்றிணைந்து கோபத்தில் எட்டு ஹெக்டேர் பஞ்சாயத்து வன நிலத்தை நேற்று எரித்ததாகவும், கிராமத்தினர் வெளி மனிதர்களை உள்ளே அனுமதிக்காததால் தீ்யை அணைக்க முடியாமல் போனதாகவும்” கூறுகிறார் பேகேஸ்வர் வன அதிகாரி ஒருவர்.

ஏற்கனவே கடந்தமார்ச் மாதம், 4 வயது சிறுவனை இதே சிறுத்தை கொன்றதாக கிராமத்து மக்கள் கூறுகின்றனர். 

இராண்டாம் முறை நடக்கும் தாக்குதல் என்பதால் காட்டுக்குள் ஒலிந்துக் கொண்டிருக்கும் சிறுத்தைகளிடமிருந்து  தங்களை காத்துக்கொள்ள கிராமத்தினர் வனத்தை எரித்ததாக கூறுகிறார் வனத்துறை அதிகாரி.

அச்சிறுத்தையை மனித கொல்லியாக்க அறிவித்து, சுட்டுத் தள்ளவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக வன அதிகாரி குப்தா கூறியுள்ளார்.
.