அமெரிக்காவில் உள்ள ஜான் ஃப். கென்னடி விமானநிலையத்தில், கடந்த சனிக்கிழமையன்று அங்குள்ள அரசு அதிகாரிகளால் ஹேர் ரோலர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டஜன் கணக்கான ஃபின்சஸ் பறவைகள் பிடிபட்டன.
அமெரிக்காவின் சுங்கத்துறை அதிகாரிகளும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளும் பயணி ஒருவரை விமானநிலையத்தில் சோதனை செய்தனர். குயானாவிலிருந்து நியூயார்க் வரை செல்லவிருந்த அப்பயணி சுமார் 70 ஃபின்சஸ் பறவைகளை, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ரோலர்களில் வைத்து எடுத்து சென்றனர் மேலும் பிடிபட்ட அப்பறவைகளை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடத்தலில் ஈடுபட்ட அந்நபரை இம்முறை அமெரிக்காவுக்குள் நுழையாமல் தடுக்க முடியும் என்னும் ஆனால் வருங்காலத்தில் வரலாம் என்பதையும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா அரசு சார்பாக வெளியிட்ட அறிக்கையில் கடந்த 12 முதல் 18 மாதங்களில் சுமார் 200 ஃபின்சஸ் பறவைகள் பிடிபட்டதாக வெளியானது. மேலும் கடத்தப்படும் புறாக்கள் மயக்க நிலையிலோ, கழிவறையில் பயன்படுத்தப்படும் டாய்லெட் பேப்பர் டியூபுகளில் கடத்தி செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)