தேசியக் கொடியை ஏற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்கும் தமிழக கவர்னர். உடன் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.
தமிழகத்தில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் காந்தி சிலை அருகே விழா மேடை அமைக்கப்பட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற ராணுவ மற்றும் காவல் துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சுமார் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
முக்கிய இடங்கள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் குடியரசு தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.