This Article is From May 21, 2020

ஆம்பன் புயல் பாதிப்புக்கு மேற்கு வங்கத்தில் 72 பேர் பலி! முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்

உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மதியம் போனில் தொடர்பு கொண்டு மம்தாவிடம் பேசினார். புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான உதவி மேற்குவங்கத்திற்கு அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

ஆம்பன் புயல் பாதிப்புக்கு மேற்கு வங்கத்தில் 72 பேர் பலி! முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்

புயல் பாதிப்பால் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Kolkata:

மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி 72 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா பாதிப்புகளால் மேற்கு வங்கம் தவித்து வரும் நிலையில், ஆம்பன் புயலும் சேர்ந்து மாநிலத்தின் நிலையை கவலைக்குரியதாக மாற்றியுள்ளன.

சக்திமிக்க ஆம்பன் புயல் ஆயிரக்கணக்கான வீடுகளை சிதைத்து விட்டது. மரங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்டவை அடியோடு சாய்ந்துள்ளன.

புயல் பாதிப்பால் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

ஆம்பன் புயல் பாதிப்பு குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது-

இதுபோன்ற பேரிழப்பை நான் இதற்கு முன்பாக பார்த்தது இல்லை. ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்பை பார்வையிட பிரதமர் வரவேண்டும் என்று நான் கோரிக்கை வைப்பேன். புயலில் சிக்கி 72 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2.50 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். 

உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மதியம் போனில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார். புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான உதவி மேற்குவங்கத்திற்கு அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நேற்று மாலை கருத்து தெரிவித்த மம்தா, மாநிலத்தில் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு ஆம்பன் புயலால் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறியிருந்தார். 

1999 ஆம் ஆண்டு ஒடிசாவைத் தாக்கி சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்த சூப்பர் புயலுக்கு பின்னர் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக மோசமான இரண்டாவது "சூப்பர் புயல்" ஆம்பன் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

.