This Article is From Aug 15, 2019

நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டம்! விழாக்கோலம் பூண்டது டெல்லி!!

சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த முறை மோடி சுதந்திரதினத்தன்று பேசுகையில், கடந்த ஆட்சிக் காலங்களின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டம்! விழாக்கோலம் பூண்டது டெல்லி!!

எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்

New Delhi:

நாடு முழுவதும் இன்று 73-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. 

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின்னர் நடைபெறவுள்ள முதல் சுதந்திர தின கொண்டாட்டம் என்பதால், பிரதமர் மோடியின் உரை இன்று முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரில் சுதந்திர தின கொண்டாட்டம் செங்கோட்டையில் 7.30-க்கு தொடங்கி நடைபெறுகின்றன. 

இதில் டெல்லியில் 41 அரசுப் பள்ளிகளை சேர்ந்த சுமார் 9 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். கோட்டையில் கொடியேற்றிய பின்னர் பிரதமர் மோடி முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். 

51a4oq9o

சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த முறை மோடி சுதந்திரதினத்தன்று பேசுகையில், கடந்த ஆட்சிக் காலங்களின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக மோடி அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. 3 மாதங்களுக்குள்ளாக முத்தலாக் மசோதா நிறைவேற்றம், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட பரபரப்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கிறது. 

இந்த விவகாரங்கள் தொடர்பாகவும் மோடி தனது சுதந்திர தின உரையில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அதில் தற்பேது ஏற்படுத்தப்பட்ட சட்டங்களும், ஏற்கனவே இருந்தனவற்றில் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களும் நாட்டு மக்களுக்கு ஏராளமான பயன்களை தரும். கல்வி உரிமை; தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளுதல்; பின்தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு; முத்தலாக் முறையை அகற்றியது உள்ளிட்டவை மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

(With inputs from ANI and PTI)

.